ஊடகப் போட்டிகள் 2016

மாணவர்களுக்கான மாநில அளவிலான ஊடகப் போட்டிகள் 2016

மையக் கரு: சமூக மாற்றத்திற்கான ஊடகம்

1. கவிதைப் போட்டி  
தலைப்பு : எங்கே செல்லும் இந்தப் பாதை? (தமிழ் ஊடகங்களின் போக்குகள் குறித்து)
அளவு : நூறு வரிகளுக்கு மிகாமல்

2. கட்டுரைப் போட்டி  
தலைப்பு : சின்னத்திரையும், வெள்ளித்திரையும் - ஒரு சமூகப் பார்வை
அளவு : 5 பக்கங்கள்

3. சிறுகதைப் போட்டி  
கரு : சமூக மாற்றத்திற்கான ஏதேனும் ஒரு கருவினைக் கொண்டு அமையலாம்.
அளவு : ஐந்து பக்கங்கள்

4. திரைப்படத்திற்கான கதைப் போட்டி
கரு : சமூக மாற்றத்திற்கான ஏதேனும் ஒரு கருவினைக் கொண்டு அமையலாம். ஒரு திரைப்படத்திற்கான கதைச்சுருக்கமாக இது அமைய வேண்டும்.
அளவு : ஐந்து பக்கங்கள்

5. ஓவியப் போட்டி
தலைப்பு : நிஜமும் நிழலும் (ஊடகங்களின் இருமுகங்கள் குறித்து)
அளவு : A4

6. வாக்கியப் போட்டி
தலைப்பு : ஊடகங்களின் கடமை குறித்து வாசகங்கள் அமைய வேண்டும் 
அளவு : 2 முதல் 4 வரிகள்

7. ஒரு நிமிடக் குறும்படப்போட்டி
தலைப்பு : "மெய்ப்பொருள்"
(ஊடகங்களிலிருந்து உண்மைகளை பொதுமக்கள் பிரித்தறிய வேண்டியதன் அவசியம் குறித்து)
அளவு : 1 நிமிடம்

8. குறும்படப் போட்டி
கரு : சமூக மாற்றத்திற்கான ஏதேனும் ஒரு கருவினை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
அளவு : 7 முதல் 10 நிமிடங்கள்

9. புகைப்படப்போட்டி
கரு : என் தேசம், என் மக்கள்
அளவு : A4

10. சமூக மாற்றத்திற்கான / வளர்ச்சிக்கான சிந்தனைப் போட்டி
கரு : சமூக மாற்றத்திற்கான / வளர்ச்சிக்கான ஏதேனும் ஆலோசனையை விரிவாக எழுதி அனுப்ப வேண்டும்.
அளவு : 2 பக்கங்கள்

போட்டி விதிமுறைகள்:
இளங்கலை / இளம் அறிவியல் / பொறியியல் பட்டப்படிப்புகள் படிக்கும் இறுதி ஆண்டு  மாணவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கு பெறலாம்.
போட்டியாளர் பற்றிய தகவலை இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இருக்கும் படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பவும்: போட்டியாளர் தகவல் படிவம்
போட்டியாளர் தகவல் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி: MediaArts@LoyolaCollege.edu
மாணவர் அடையாள அட்டை நகலை விண்ணப்பத்துடன் இணைக்கவும்.
போட்டி நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது.
ஒரு மாணவர் எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் படைத்து அனுப்பலாம்.
படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 10-பிப்ரவரி-2016 (நீட்டிக்கப்பட்டுள்ளது)
நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
போட்டியாளர்களின் படைப்புகளை போட்டி நடத்துபவர்களின் விளம்பரங்களில் பயன்படுத்திக்கொள்ள உரிமை எடுத்துக்கொள்ளப்படும்.


பரிசுகள்:
ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடிக்கும் 10 படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேரில் அழைக்கப்படுவர்.
பரிசு வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், ஊடகத் துறையின் பிரபலங்களால் கௌரவிக்கப்படுவார்கள்.
முதல், இரண்டாமிடம் பெறும் மாணவர்களுக்குப் பரிசுகளும், 3, 4, 5 -ஆம் இடம் பெறும் மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும், கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
எமது துறை சார்பில் நடத்தப்படவிருக்கும் மாநில அளவிலான பயிலரங்கில் வெற்றியாளர்கள் இலவசமாகப் பங்குபெறலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் ஐம்பது மாணவர்களில், தகுதியும், ஊடக உலகில் சாதிக்க வேண்டும் என்ற கனவும் உள்ள மாணவர்களுக்கு இந்தியாவின் முதன்மையான கல்லூரியாம் லொயோலா கல்லூரியில் முதுகலை ஊடகக்கலைகள் துறையில் படிக்கும் வாய்ப்பு (2016 - மே மாதம் நடைபெறும் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்காணலில் முன்னுரிமை) வழங்கப்படும்.


No comments:

Post a Comment